
தமிழகத்தில் மக்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் காரணமாக புதிய ரேஷன் கார்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் தற்போது மீண்டும் புதிய ரேஷன் கார்டுகள் பணி தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முதலில் https://www.tnpds.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அடுத்ததாக திரையில் தோன்றும் படிவத்தை நிரப்ப வேண்டும். அதில் கேட்கும் ஆவணங்களை அதற்கு உண்டான அளவுகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பிறகு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் எண்ணிக்கை ஆகிய தகவல்களை வழங்க வேண்டும். பிறகு உறுதிப்படுத்த என்பதை கிளிக் செய்து திரையில் தோன்றும் ரெஃபரென்ஸ் எண் குறித்துக் கொள்ள வேண்டும். இறுதியாக உங்களுடைய வீட்டுக்கே ரேஷன் கார்டு அனுப்பி வைக்கப்படும்.