இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் மோசடிகளும் அந்த அளவுக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதுவிதமான உத்திகளை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் செல்போனுக்கு மெசேஜ் அனுப்புவது மற்றும் ஏதாவது ஒரு லிங்கை அனுப்பி அதனை தொடும் போது வங்கி விவரம் முழுவதும் மோசடிக்காரர்கள் கையில் சிக்கி பணம் மொத்தமும் பறிபோகிறது. இது தொடர்பாக விழிப்புணர்வுகள் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வீட்டிலிருந்தே வேலை பகுதி நேர வேலை என்றெல்லாம் கூறி மோசடி அரங்கே இருக்கிறது. அதன் பிறகு குறைந்த ரூபாய் முதலீடு செய்தால் அதிகளவில் லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் தற்போது புதுவிதமாக இந்திய தொலைத்தொடர்பு ஆணையத்தின் பெயரில் மோசடி வேலை அரங்கேறுகிறது. அதாவது டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்திலிருந்து (டிராய்) பேசுகிறோம் என்று கூறி அழைப்பு வருகிறது. பின்னர் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை கேட்டு அறிந்து வங்கி கணக்கில் இருந்து பணத்தை ஏமாற்றுகிறார்கள். மேலும் இதனை அறிந்த ட்ராய் நாங்கள் பயனர்களுக்கு இப்படி எந்தவிதமான போனும் பண்ண மாட்டோம். எனவே இப்படிப்பட்ட போன் கால் வந்தால் யாரும் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்கும்படி தெரிவித்துள்ளது.