
அம்மா உணவகங்களின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாநகராட்சி சார்பாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி ருசியான உணவுகளை வழங்குவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி ரூபாய் 5 கோடி செலவில் அம்மா உணவகங்களின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கி இருக்கிறது. அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 399 அம்மா உணவகங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சென்னை மேயர் பிரியா உத்தரவு பிறப்பித்துள்ளார்.