அசாமில், பாஜக மாநிலத் தலைவர் திலீப் சாய்கியா மற்றும் அமைச்சர் ஜயந்த மல்லா பாருவா இடையே நடந்த வாக்குவாதம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நல்பாரி மாவட்டம் பாஹ்ஜானியில், புதிய மண்டல அலுவலகம் தொடக்க விழாவின்போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உட்பட பல முக்கிய பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் இருந்தனர்.

 

இந்நிலையில் வீடியோவில், திலீப் சாய்கியா, தங்கள் கட்சியின் உள்ளூராட்சி மண்டலத் தலைவரை உடனடியாக விலக்க வேண்டும் என கடுமையாகக் கண்டித்தும், ஜயந்த மல்லா பாருவாவை விமர்சித்தும் காணப்படுகிறார். “உங்களது தொகுதி… தலைவர் மேல் அவமதிப்பு” எனக் கூறும் காட்சியும் வீடியோவில் உள்ளது. இந்த சண்டைக்கு இடையே முதல்வர் சர்மா மற்றும் மற்ற நிர்வாகிகள் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டு அலுவலக வளாகத்தில் உள்ள அறைக்குள் நுழைந்தனர். மேலும் அமைச்சருடன் நிர்வாகி ஒருவர் தகராறு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.