
தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவருக்கு விரைவில் கார்டுகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். அதாவது இதுவரை தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களின் ரேஷன் கார்டுகள் பிரிண்டிங் செய்வதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் இன்னும் 30 நாட்களில் மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் கைகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ரேஷன் கார்டு பெறுவதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில் கடந்த வருடம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.