ஐபிஎல் 2025 தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில், இளம் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய்  ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜஸ்பிரித் பும்ராவை ரவி பிஷ்னோய்சிக்ஸராக அடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 16வது ஓவரில் டேவிட் மில்லர் வெளியேறிய பின் களமிறங்கிய ரவி பிஷ்னோய், 14 பந்துகளில் 13 ரன்கள் குவித்தார்.

 

இதில் அவர் இரு சிக்ஸர்கள் விளாசினார். கார்பின் போஷ் பந்தில் முதல் சிக்ஸை அடித்த அவர், பும்ரா வீசிய 18வது ஓவரின் கடைசி பந்தில் தகுந்த தைரியத்துடன் லாங் ஆனை தாண்டி சிக்ஸரை பதிவு செய்தார். சிக்ஸை அடித்ததும் பும்ராவை நேராக பார்த்து ஆவேசமாக கொண்டாடிய பிஷ்னோயின் மகிழ்ச்சி, டக்அவுட்டில் இருந்த கேப்டன் ரிஷப் மற்றும் ஜாஹீர் கானை  ஆச்சரியமடையச் செய்தது. ரவி பிஷ்னோய் செய்த இந்த அதிரடியான செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.