
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வரும் நிலையில், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை புறவாசல் வழியே அச்சுறுத்த பார்க்கும் பாஜகவின் அரசியல் செல்லுபடியாகாது என்று முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “தன் வசமிருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் வாயிலாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜக பழிவாங்கும்.
அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இதுமட்டும் தான் என நான் ஏற்கனவே கூறி இருந்தேன். அதற்கு இந்திய அளவில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் அண்மை காலங்களில் பல மாநிலங்களில் நடந்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என குறிப்பிட்டுளார்.