
நமீபியா நாட்டின் அதிபர் ஹேக் கெய்ன்கோப் (82) உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட ஒரு சில வாரங்களிலேயே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலது என்று அவர் இன்று உயிரிழந்தார். இவர் 1990 ஆம் ஆண்டு நமீபியாவின் முதல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு முதல் அவரே நமீபியாவின் அதிபராகவும் நீடித்து வந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.