நடுரோட்டில் இளம் பெண் ஒருவர் வாலிபரை கொடூரமாக தாக்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது டெல்லியில் உள்ள ஒரு சாலையில் இளம் பெண் ஒருவர் புல்லட்டில் சென்றுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் வழிவிடாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம் பெண் பைக்கில் இருந்து கீழே இறங்கி வந்து ஆட்டோ ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த இளம் பெண் தன் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் அவரின் மண்டையை அடித்து உடைத்தார். இதில் அவருக்கு ‌ மண்டை உடைந்து ரத்தம் வந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட இளம் பெண் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வழிவிட முடியவில்லை என்று ஆட்டோ ஓட்டுனர் கூறியுள்ளார். மேலும் நடு ரோட்டில் இளம்பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டுநரை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.