
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்துள்ளார். டெல்லி சென்று அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ள எடப்பாடி பழனிசாமி முக்கியமான விஷயங்களை பேசியுள்ளார். அதாவது வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து அமித்ஷாவிடம் பேசிய இபிஎஸ், நாம் பிரிந்து இருந்தால் எதிரிகளுக்கு வெற்றி எளிமையாகிவிடும் என்று கூறியுள்ளார். மேலும் வரும் நாட்களில் அதிமுக பாஜக கூட்டணியில் – குழப்பம் இல்லாமல் செயல்படுவது குறித்து பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
PTR ஆடியோ விவகாரத்தை நேரடியாக டெல்லிக்கு எடுத்து சென்றுள்ளார் இபிஎஸ். அமித்ஷாவை சந்தித்த பின் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ரூ.30,000 கோடி ஊழல் என்பது ஒரு நாட்டின் பிரச்னை. PTR ஆடியோ விவகாரம் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் வலியுறுத்தி உள்ளோம். ஆடியோவை விவகாரத்தை அமித்ஷா ஏற்கனவே அறிந்துள்ளார்” என கூறினார்.