
பூமியை நோக்கி தற்போது விண்கல் ஒன்று மிக வேகமாக வந்து கொண்டிருக்கிறது. இது மனித குலத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த விண்கல்லுக்கு அபோபிஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை எகிப்திய நாகரிகத்தின் படி அழிவின் கடவுளுக்கு வைக்கப்படும் பெயராகும். இந்த விண்கல் கடந்த 2002 ஆம் ஆண்டு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
இது வருகிற 2029 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி பூமியை தாக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த விண்கல்லை விஞ்ஞானிகள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இதன் தாக்குதலில் இருந்து இந்தியா தப்பிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இந்த விண்கல் தற்போது பூமியிலிருந்து சுமார் 32,000 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதாகவும் இதே போன்ற ஒரு மிகப்பெரிய விண்கல் இதுவரை பூமியை நோக்கி வந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தை விட மிகப்பெரியது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வருகிற 2029 ஆம் ஆண்டு பூமியின் மீது இந்த விண்கல் மோதும் பட்சத்தில் மிகப்பெரிய பேரழிவு வரலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.