தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அலங்கிணறு காலனி தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி அந்தோணி ராஜ் (52) என்பவரும், அவரது சகோதரர் காசிவேலும் பூர்வீக சொத்து விவகாரத்தில் தகராறு ஏற்பட்டு பேசாமல் இருந்தனர். நேற்று அந்தோணி ராஜ் தனது சகோதரர் வீடு அருகே சென்ற போது, சொத்து விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் காசிவேல், அவரது மகன் பரத் (19) மற்றும் சிலர் இணைந்து அந்தோணியை கட்டைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அந்தோணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், தீவிர காயங்களால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் காசிவேல் மற்றும் அருளம்மாளை கைது செய்துள்ளனர். தப்பியோடிய பரத்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.