
இந்தியாவில் சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் சுய தொழில் தொடங்கும் பெண்களுக்காக அரசு சார்பில் குறைந்த வட்டியில் கடன் உதவியும் மானியத்தில் கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி பெண்களின் பொருளாதார தன்னம்பிக்கைக்காக மத்திய அரசு கொண்டுவந்த பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டமும் ஒன்று. இதன் மூலமாக தகுதியான பெண்களுக்கு அரசு இலவச தையல் இயந்திரம் வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் பெண்கள் விண்ணப்பித்தால் அரசு பரிசிலீத்து தையல் இயந்திரம் வழங்கப்படும். முழுமையான விவரங்கள் அறிய https://pmvishwakarma.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.