
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் படு கிளாமராக நடித்துள்ளார். இந்நிலையில் முத்தக் காட்சிகளில் நடிப்பது குறித்து, நடிகை தமன்னா நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
அதில், முத்தக் காட்சிகளில் நடிக்காமல் இருந்த அவர், ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ படத்தில் முதல்முறையாக அதற்கு ஒப்புக்கொண்டதாகவும், அந்த காட்சிகளை படமாக்கும் போது பெண்களை விட ஆண்களே அதிகம் அசௌகரியமாக உணர்வார்கள் என்றும் கூறினார். மேலும், நடிகைகள் மனம் உடைந்து போய்விட கூடாது என நடிகர்கள் யோசிப்பார்கள் எனத் தெரிவித்தார்.