பெங்களூரைச் சேர்ந்த 29 வயது பெண் சாப்ட்வேர் இன்ஜினியராக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் அந்தப் வேலையை இழந்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய வேலையை தேடிவந்துள்ளார்.

அப்போது சமூக வலைதளத்தில் ஒருவர் அறிமுகம் ஆகி அவருடன் பபழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் தன்னுடைய சூழ்நிலையை கூறியுள்ளார்..  அதாவது தான் வேலை தேடி வருவதாகவும் பல நிறுவனங்களில் வேலைக்கு அப்ளை செய்தும் தற்போதுவரை நல்ல தகவல் வரவில்லை என்று சாதாரணமாக கூறியுள்ளார். இந்நிலையில் அந்த நபர் தான் வேலை வாங்கி தருவதாகவும். அதற்கு நீங்கள் ஹைதராபாத் வர வேண்டும் எனவும் ஆதரவாக  கூறியுள்ளார்.

அதனை நம்பி அந்தப் பெண் ஹைதராபாத் சென்றுள்ளார். அப்பொழுது அவர் வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு கன்சல்டிங் நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் கடந்த ஜூன் மாதம். நடந்ததாகவும் சில நாட்களுக்கு முன் போலீசில் புகார் அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு வரவில்லை என்றும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக. தெரிவிக்கப்பட்டுள்ளது.