நாக்பூரில் இந்திய ராணுவத்தின் பிரமோஸ் ஏவுகணை மையம் அமைந்துள்ளது. இங்கு தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவில் நிஷாந்த் அகர்வால் என்பவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு ராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் உத்தர பிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புக்கு பகிர்ந்ததாக கூறி நிஷாந்த் அகர்வாலை கைது செய்தனர்.

அதாவது பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்பினர் பெண்கள் போல முகநூல் மூலமாக பேசி நிஷாந்த் அகர்வாலிடம் ராணுவ ரகசியங்களை கேட்டு அறிந்தனர். இது தொடர்பான வழக்கு நாக்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது இந்திய ராணுவத்தின் ரகசியங்களை பாகிஸ்தான் உளவ அமைப்புக்கு நிஷாந்த் கூறியது உறுதியானது. இதனால் நீதிபதி எம்.வி தேஷ் பாண்டே குற்றவாளிக்கு ஆயுள் மற்றும் 14 ஆண்டுகால கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் நீதிபதி அவருக்கு 3000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.