
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு ஒரு விமானம் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த விமானம் அவசரமாக தரை இறங்கியது. இந்த சம்பவம் கடந்த மாதம் 15 ஆம் தேதி நடந்த நிலையில் தற்போது தான் தெரிய வந்துள்ளது. அதாவது அமெரிக்க நாட்டில் வசிக்கும் ஈதன் ஜூடல்சன் என்பவர் இந்த சம்பவம் தொடர்பாக தன்னுடைய டிக் டாக் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் அந்த விமானத்தில் தானும் பயணித்ததாகவும் அந்த விமானம் அவசரமாக தரையிறங்கியதற்கான காரணத்தை அந்நிறுவனம் முழுமையாக தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
அதன் பிறகு அந்த விமானம் அவசரமாக தர இயக்கிய போது பதற்றம் அடையும் படியாக எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் தரையிறங்கும் சமயத்தில் ஒரு பெண் அவசரமாக முன் பகுதியை நோக்கி ஓடினார். இது தொடர்பாக அவர் விசாரித்தபோது அந்தப் பெண்ணின் தலையில் பேன் இருப்பதாக கூறியுள்ளனர். அதாவது அந்த பெண்ணின் தலையில் ஏராளமான பேன்கள் இருந்ததாக 2 பெண்கள் விமான பணிப்பெண்களிடம் புகார் கொடுத்துள்ளனர். இதனால்தான் அந்த விமானம் அவசரமாக தரையிறங்கப்பட்டது. இருப்பினும் அந்த விமானம் மீண்டும் கிளம்பிய போது பயணிகள் அனைவருக்கும் அதே இருக்ககை வழங்கப்பட்டது. மேலும் பேன் இருப்பதாக புகார் கொடுத்த பெண்கள் மட்டும் மீண்டும் அந்த இருக்க வேண்டாம் என்று சண்டை போட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.