ஆஸ்திரேலிய நாட்டின் சுகாதாரத் துறைக்கான துணை மந்திரியாக செயல்படுபவர் பிரிட்டானி லாவ்கா (37). இவர் குயிலாந்து தொகுதியின்  எம்பி ஆவார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதிக்கு பொழுது போக்குவதற்காக இரவு நேரத்தில் சென்றுள்ளார். அப்போது சிலர் பிரிட்டானியை கொடூரமான முறையில் தாக்கியதோடு அவருக்கு மயக்கம் மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர். இந்த தகவலை எம்பி பிரிட்டானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் இது போன்ற கொடூரமான சம்பவங்கள் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

என்னுடைய உடலில் போதை மருந்து கலந்திருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. நான் அதனை உட்கொள்ளவில்லை. இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னை தொடர்பு கொண்டு பேசிய பிற பெண்களுக்கும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கலாம். இது சரியல்ல. நம்முடைய நகரில் பாலியல் துன்புறுத்தல் இல்லாத, நாம் மகிழ்ச்சியான சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ஒரு நாட்டின் மந்திரியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.