இந்தியாவில் சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மக்களை நலனுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது மட்டுமல்லாமல் வட்டி விகிதமும் அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் மக்கள் அதிக அளவு முதலீடு செய்ய விரும்புகின்றனர்.

அதன்படி சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது மத்திய அரசின் ஆதரவு பெற்ற சிறுசேமிப்பு திட்டம் ஆகும். இது அரசியல் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தைக்கான எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.60 சதவீதத்தில் இருந்து எட்டு சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 8% பிரிவு 80c யின் கீழ் வரி விலக்குகளை பெறவும் இந்த திட்டம் உதவும். குறைந்தபட்சமா ஆயிரம் ரூபாய் செலுத்தி அஞ்சலகம் அல்லது வங்கிகளில் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கணக்கை தொடங்கலாம்.