
மத்திய மற்றும் மாநில அரசுகளானது பெண்களுடைய முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் மத்திய அரசின் கன்ய உத்தன் யோஜனா திட்டத்தில் பெண் குழந்தைகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக 50,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பீகார் மாநிலத்தில் சுமார் ஒன்றரை கோடி பயனாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இன்னும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சேர மே 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுவரை சேர்ந்தவர்களுக்கு 1 முதல் 2 வயது வரை முதலில் ரூ.600ம், பின் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ. 700ம், 6 முதல் 8 ஆண்டுகள் வரை ரூ. 1000ம், 9 முதல் 12 வயது வரை ரூ. 1500ம் வழங்கப்படுகிறது. இந்த தொகை மொத்தமாக சேர்ந்து பட்டம் பெறும்போது ரூ.50000 ஆக வழங்கப்படும். ஆதார் அட்டை, பெண் குழந்தைகளின் பெற்றோர் ஆதார், பெண் குழந்தைகளின் வங்கி பாஸ்புக், பத்து பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் , செல்போன் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்றவை இந்த திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்.