
கைலாசா எங்கே இருக்கிறது என இதுவரை அறிவிக்காமல் இருந்த நித்தியானந்தா கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போவதாக கூறி இருக்கிறார். குரு பூர்ணிமா அன்று கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போவதாகவும் அவர் அறிவித்திருந்தார். அதனால் கைலாசா எங்கே இருக்கிறது என்பதை அறிய அனைவரும் ஆர்வம் காட்டினர். ஆனால் அதை இன்னும் காட்டியபாடில்லை. இந்நிலையில் நித்யானந்தா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பெண் சன்னியாசிகள் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் பல அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.
இது அவர்களுடைய ஆன்மீக செயல்பாடுகள் மற்றும் உரிமைகளை பாதிக்கிறது. பெண் சன்னியாசிகள் சமுதாயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் மற்றும் அவர்களுக்கு எதிராக வன்முறை அச்சுறுத்தல்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் அனைவரும் இந்த நிலையில் எதிர்த்து குரல் எழுப்பவேண்டும். அவர்களின் பாதுகாப்பையும் உரிமையும் ஆதரிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
பெண் சன்னியாசினிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்!
பெண் சன்னியாசிகள் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள். 🌿 இந்த அச்சுறுத்தல்கள், அவர்களின் ஆன்மிக செயல்பாடுகளை மற்றும் உரிமைகளை பாதிக்கின்றன. பெண் சன்னியாசிகள், சமுதாயத்தில் முக்கிய பங்கு… pic.twitter.com/UCHG11bOgq
— KAILASA’s SPH NITHYANANDA (@SriNithyananda) March 24, 2025