
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் தமிழ்நாட்டில் பெரியார் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்கள் சீமான் பேசியதற்கு ஆதாரம் கண்டிப்பாக வேணும் இல்லையெனில் கண்டிப்பாக அவரை எங்கும் நுழைய விடமாட்டோம் என்று கூறியுள்ளனர். அதாவது சீமான் பாலியல் இச்சை வரும்போது தாய் மகள் மற்றும் சகோதரியுடன் உடலுறவு கொள்ளுங்கள் என்று பெரியார் சொன்னதாக கூறினார். இந்த கருத்து பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் தற்போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சீமான் பேசியதற்கு ஆதரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை கூறியதாவது, சீமான் அண்ணன் பேசியதற்கான ஆதாரத்தை நான் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன்.
அவர் போலீசார் வரும்போது பெரியார் பேசியது அப்படி எந்த புத்தகத்தில் இருக்கிறதோ அந்த புத்தகத்தின் காப்பியை மட்டும் அவர்களிடம் கொடுத்தால் போதுமானது. இல்லையெனில் பெரியார் அப்படி பேசியதற்கான ஆதாரத்தை சீமானுக்கு பதிலாக நான் கொடுக்கிறேன். ஆனால் பொதுவெளியில் சீமான் இப்படி ஒரு கருத்தையும் பேசியதில் எனக்கு உடன்பாடு இல்லை. தற்போது அரசியல் என்பது மாறிவிட்டது. மக்கள் வேறொரு கண்ணோட்டத்தில் அரசியலை பார்க்கிறார்கள். பெரியார் சொன்ன சில விஷயங்களை தற்போது கூறினால் மக்கள் மத்தியில் அருவருப்பாக இருக்கும். மேலும் அதனால் இதைப் பற்றி நான் மேலும் பொது வெளியில் பேசவில்லை எனவும் சீமான் அண்ணனுக்காக அந்த ஆதாரத்தை வேண்டுமானால் காட்ட நான் தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.