இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் கூட்டணியில் உள்ள மாநிலங்களுக்கு மட்டும்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதார நிபுணர்கள், அரசியல் நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பொருளாதார நிபுணரான பேராசிரியர் ஜோதி சிவஞானம் பட்ஜெட் குறித்த தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

அதாவது பாஜக கட்சி ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். மேலும் இதே போன்று அரசியல் விமர்சகரான சுமந்த சி ராமன் இந்த பட்ஜெட்டில் பெருசா ஒன்னும் இல்லங்க. ஆந்திரா மற்றும் பீகாருக்கு கொடுக்கலன்னா ஆட்சி கவிழ்ந்துவிடும். அதனாலதான் அந்த இரு மாநிலங்களுக்கு மட்டும் பட்ஜெட்டில் அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்சியை தக்க வைப்பதற்கும் அவர்களை குஷிப்படுத்துவதற்காகவும் தான் பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.