தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் தமிழக வெற்றிக்கழகம் சந்திக்க இருக்கிறது. எனவே 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் அமைக்காது. எனவே இது பற்றி ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட வேண்டாம். தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறது என்பது அடிப்படை ஆதாரம் அற்ற ‌செய்தி. இது தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சியை மடைமாற்றும் முயற்சி. எனவே இது போன்ற பொய்யான செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மேலும் பெரும்பான்மை பலத்துடன் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பொதுமக்களின் ஆதரவோடு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பதே தமிழக வெற்றி கழகத்தின் நோக்கம் என்றும், நேற்று ஒரு பிரபலமான நாளிதழ் தலைப்பு செய்தியாக தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று கூறிய நிலையில் அது உண்மைக்கு புறம்பானது. எனவே நாளிதழ்கள் செய்தி வெளியிடும்போது பொறுப்புணர்வோடு உண்மை தன்மையை ஆராய்ந்து வெளியிட வேண்டும். மேலும் ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை வெளியிட வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது திட்டவட்டமாக தெரிந்து விட்டது.