
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பண்ணை வயல் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தீபன் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராவார். இவருக்கு கடந்த 29-ம் தேதி தான் பதவி வழங்கப்பட்டது. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படும் நிலையில் அந்த மாணவி நேர்ந்த சம்பவங்களை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தீபன் மீது புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் படி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தீபனை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அதிமுக நிர்வாகி ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.