உலக அளவில் பிரபலமான பாப்- இசை குழுவில் ஒன்றாக one direction திகழ்ந்தது. இந்தக் குழுவில் பாடகராக இருந்தவர் லியன் பெயின். இவர் ஒரு பிரபலமான பாடகராக வலம் வந்த நிலையில் அந்த குழு கலைக்கப்பட்ட அதன் பிறகு சோலோ பாடகராக வலம் வந்தார். இவர் அர்ஜெண்டினா நாட்டிலுள்ள பலர் மோவாவை அடுத்த கோஸ்டாரிக்கா தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் மது பழக்கம் மற்றும் தற்கொலை எண்ணங்களால் தவிர்த்து வந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வர சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் ரசிகர்களின் ஆதரவு மற்றும் உற்சாகம் போன்றவற்றால் தான் தற்போது நலமுடன் உணர்வதாகவும் 100 நாட்களாக பிரச்சனை இன்றி மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் தற்போது மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவருக்கு தற்போது 31 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.