
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு அரசு பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்து கடலூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த வழியாக வந்த ஒரு லாரி பேருந்து மீது மோதியதில் விபத்துக்குள்ளானது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென பேருந்து மீது மோதியதோடு சென்டர் மீடியனில் ஏறி நின்றது.
இந்த விபத்தில் சுமார் 20 பேர் பலத்த காயமடைந்த நிலையில் அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.