திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் என்ற பகுதியில் தினகரன் (20) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் பாலாஜி (19) மற்றும் மற்றொரு நண்பருடன் மூவரும் இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தனர். இவர் கோபால்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென பைக்கின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பாலாஜி மற்றும் மற்றொரு வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தினகரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவர்கள் ஜூஸ் தொழிற்சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஜூஸ் தொழிற்சாலையில் இருந்து அடிக்கடி லாரிகள் வேகமாக வருவதாகவும் இதனால் விபத்துக்கள் அதிகளவில் நடப்பதாகவும் குற்றம் சாட்டி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.