2025 ஆம் ஆண்டு பிறந்த நிலையில் முதல் முறையாக தமிழக சட்டசபை கூடுகிறது. இந்த சட்டசபை இன்று ஆளுநர் ரவியின் பெயர்ச்சூடன் தொடங்க இருக்கிறது. இன்று ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் தொடங்கப்படும். அதன் பிறகு அலுவல் ஆய்வுக் குழு கூடி எத்தனை நாட்கள் சட்டசபையில் நடத்த வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யும். அதன் பிறகு இன்று நடைபெறும் சட்டசபை கூட்டத்தின் போது பொங்கல் பரிசுத் தொகை ஆயிரம் வருமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. எனது கூட்டணியில் இருக்கும் காட்சிகளை பொங்கல் பரிசுத்த வகுப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாக முதல்வர் தன் முடிவை மாற்றிக் கொள்வாரா? என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த கூட்டத்தொடர் சரியாக காலை 9:30 மணிக்கு தொடங்கும் நிலையில் ஆளுநர் 45 நிமிடங்கள் உரையாற்றயிருக்கிறார். இந்த முறையாவது ஆளுநர் எழுதிக் கொடுத்த உரையை படிப்பாரா? அல்லது வேறு ஏதேனும் உரையை படிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனுடன் கூட்டம் நிறைவடையும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அதிமுக உங்கிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பாக எடுத்துக் கொண்டு விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளது. மேலும் இந்த கூட்டத்தொடர் துறை வாரியான மானிய கோரிக்கை விவாதத்துடன் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு நடைபெற இருக்கிறது.