
பிரபல இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா(49). இவர் கடந்த 1999-ஆம் ஆண்டு ரிலீசான தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு 2001-ஆம் ஆண்டு ரிலீசான சமுத்திரம், கடல் பூக்கள் படத்தில் நடித்தார். அதன் பிறகு வருஷமெல்லாம் வசந்தம், ஈரநிலம், அன்னக்கொடி, பேபி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இயக்குனராக பாரதிராஜா திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்துள்ளார். ஆனால் மனோஜால் பாரதிராஜா ஆசைப்பட்ட அளவுக்கு சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை. அவரது சினிமா கனவு நிறைவேறுவதற்கு முன்பாக இன்று மனுஷ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.