இரு முறை உலக ஹெவி வெயிட் சாம்பியனாகவும், வெற்றிகரமான தொழிலதிபராகவும் திகழ்ந்த ஜார்ஜ் எட்வர்ட் போர்மன் (வயது 76) மார்ச் 21, 2025 அன்று  இயற்கை எய்தினார். அவரது குடும்பத்தினர் இன்ஸ்டாகிராம் மூலம் ஜார்ஜின் இறப்பை உறுதிபடுத்தினர். “Big George” என அழைக்கப்பட்ட அவர், உலகின் சிறந்த ஹெவி வெயிட் குத்துச்சண்டை வீரர்களில் ஒருவராக வலம் வந்தார். அவர் நற்குணம் கொண்டவர்.

1974-ஆம் ஆண்டு “Rumble in the Jungle” என அழைக்கப்பட்ட புகழ்பெற்ற சண்டையில் முஹம்மது அலியிடம் தோற்றார். இதனையடுத்து 20 ஆண்டுகள் கழித்து 1994-ல் மைக்கேல் மூரரை வீழ்த்தி, உலக ஹெவி வெயிட் பட்டத்தை மீண்டும் கைப்பற்றினார். அதன் பின், ஜார்ஜ் போர்மன் தனது பெயரால் வெளியான “Foreman Grill” எனும் மின்னணு கிரில்லின் மூலம் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக மாறினார். அவரது குடும்பம், அவருக்கு வழங்கப்படும் அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி தெரிவித்து, தங்கள் துக்கத்தில் தனியுரிமை வழங்குமாறு கேட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by George Foreman (@biggeorgeforeman)