
முன்னாள் ரோச்ச்டேல் கால்பந்து வீரரான ஜோ தாம்ஸன் (வயது 36) காலமானார். மூன்றாவது முறையாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், வியாழக்கிழமை தனது வீட்டில் குடும்பத்தினரின் மத்தியில் அமைதியாக உயிர் நீத்தார்.
தனது 29வது வயதில் 2019ஆம் ஆண்டில் விளையாட்டு வாழ்க்கையை முடித்திருந்த ஜோ, 2013ஆம் ஆண்டு ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா எனும் புற்றுநோயால் முதல் முறையாக பாதிக்கப்பட்டார். பின்னர் டிரான்மியர், பரி, சவுத் போர்ட் மற்றும் வெரெக்சாம் ஆகிய அணிகளில் விளையாடியதுடன், 2016ஆம் ஆண்டு ரோச்ச்டேல் அணிக்கு திரும்பியிருந்தார்.
2017ஆம் ஆண்டு புற்றுநோயிலிருந்து மீண்டதை அறிவித்த அவர், அதன் பிறகான சீசனில் சார்ல்டனை தோற்கடித்து அசத்தலான கோலை அடித்தார்.
2023ஆம் ஆண்டு, நான்காம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும், அது அவரது நுரையீரலுக்கும் பரவியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.