
பொதுவாக பஞ்சு மிட்டாய் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிபடுவார்கள். இந்நிலையில் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் கெமிக்கல் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியை தொடர்ந்து சென்னையிலும் விற்கப்படும் பஞ்சு மிட்டாய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கடந்த வாரம் சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பறிமுதல் செய்த பஞ்சு மிட்டாய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இப்படி பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சுமிட்டாயில் ரொடமைன் பி என்ற புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல் கலந்திருப்பது ஆய்வில் உறுதியானது. இந்நிலையில் பஞ்சுமிட்டாயை குழந்தைகள் யாருமே சாப்பிடவேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.