
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதில் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். உலகமே கொரோனா வைரசால் முடங்கியது. இதேபோன்று மீண்டும் ஒரு லாக்டவுன் வந்தால் தாங்காது. ஆனால் தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் போன்ற புதிதாக HMPV வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
ஆனால் தற்போது பெங்களூரில் 8 மாத குழந்தைக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த குழந்தையை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் தொற்று எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை குறி வைத்து தாக்கும். குறிப்பாக 2 வயலுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களை தாக்கும். இந்த நோயின் பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், குளிர் ஜுரம், மூச்சு நுண்குழாய் அலர்ஜி மற்றும் சளி போன்றவைகள் இருக்கிறது. இந்த வைரஸ் தொற்று பாதிப்பை உறுதிப்படுத்த ஆய்வக பரிசோதனை மேற்கொள்வது அவசியம். எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த நிலையில் பெங்களூருவில் மீண்டும் ஒரு குழந்தைக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது அகமதாபாத்தில் ஒரு குழந்தைக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி 2 மாத குழந்தைக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருவதாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தெரிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில் தற்போது சென்னையிலும் 2 குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் இன்று ஒரே நாளில் மொத்தம் 5 குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளை மட்டுமே எதிர் தாக்குவதால் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டுமெனவும், கர்நாடக மாநிலத்தில் இனி பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வெளியே வரவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.