இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு விதவிதமாக மிட்டாய்கள் வர துவங்கிவிட்டது. அதில்  சில மிட்டாய்கள் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடுகிறது. அப்படி உத்தரப்பிரதேஷ் கான்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒரு மிட்டாயால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

4 வயது சிறுவன் Frootola 3D Eye என்ற மிட்டாயை  வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால் அந்த மிட்டாய் சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் மூச்சு விட சிரமப்பட்ட சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனின் சடலத்தை பார்த்து பெற்றோர் கதறியது பார்ப்போரை கலங்க செய்துள்ளது .

போதிய மருத்துவர்கள் இல்லாதது தான் சிறுவனின் மரணத்திற்கு காரணம் என்று பெற்றோர் கூறியுள்ளனர். மேலும் Frootola நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மிட்டாயை விற்பனை செய்த கடையின் உரிமையாளர் தலைமறைவாகியது குறிப்பிடத்தக்கது .