பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி  வருகிறது. அந்த வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் கல்வி உரிமைச் சட்டம்(RTE) ஆனது 2019 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.   6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி இதன் மூலமாக  அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குனர் எம்.பழனிச்சாமி வெளியிட்ட  சுற்றறிக்கையில், “இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட நலிவடைந்த பிரிவினர் குழந்தைகளுக்கு எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

மாணவர் சேர்க்கை பணியை மே 29ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டில் சேர கோரும் குழந்தைகளின் பெற்றோர் http://www.rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் 22 முதல் மே 20ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.