
மிக்ஜாம் புயல் மழை வெள்ள நிவாரண நிதி குறித்தும், வங்கிக் கணக்கில் செலுத்தாமல், நேரடியாக பணமாக கொடுப்பது ஏன் எனவும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த அவர், ‘நாங்க என்ன அவங்க அப்பன் வீட்டு காசையா கேட்டோம். தமிழக மக்கள் கொடுத்த வரிப்பணம் தானே? என்று கடுமையாக சாடியிருந்தார்.
இந்நிலையில் பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என்று உதயநிதிக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். அவங்க அப்பன் வீட்டு சொத்தையா கேட்குறோம் என்று உதயநிதி பேசியதை கண்டித்த அமைச்சர், சனாதன விவகாரத்தில் நான் அழிக்க வரலை. ஒழிக்க வந்துருக்கோம் என்றார். அவருடைய மொழி எப்போதும் அப்படிதான். பெரிய தமிழ் அறிஞரின் பேரன் இப்படி பேசலாமா என்று கேள்வி எழுப்பினார்.