
கன்னியாகுமரில் நித்திரவிளை அருகே உள்ள கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பா இல்லை, அம்மாவும் இவரை விட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் ஜான் (67) என்பவர் அந்த சிறுமியை தன்னுடைய வீட்டில் தங்க வைத்துள்ளார். இவர் சிறுமிக்கு தாத்தா என்ற முறை வருகிறது. ஆனால் இவர் கடந்த 1 ஆண்டாக அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனை யாரிடம் சொல்வது என தெரியாமல் அந்த குழந்தை பதறி போய் இருந்துள்ளார்.
அதன் பின்பு அந்த சிறுமி எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார். இதனால் அந்த சிறுமி மற்றவர்களிடம் சொல்லிவிடுவாள் என்று பயந்து போன ஜான் அந்த சிறுமியை குழந்தைகள் இல்லத்தில் சேர்த்துள்ளார். இந்த சிறுமி அங்குள்ள மற்ற சிறுமிகளிடம் தனக்கு நேர்ந்த கொடூரத்தை கூறினார். இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் ஜானை கைது செய்தனர்.
இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டம் பூட்டேற்றி அருகே உள்ள கிராமத்தில் முரளி (64) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேத்தி முறையான 6 வயது குழந்தையை அடிக்கடி கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின் சாக்லேட், பிஸ்கட் போன்ற தின்பண்டங்களை வாங்கி கொடுத்து வீட்டிற்க்கு அழைத்து வருவார். ஆனால் அந்த சிறுமி வீட்டிற்கு திரும்பி வரும்போது மிகவும் சோர்வாகவே இருந்தார்.
பிறகு முரளி கடைக்கு கூப்பிடும் போதெல்லாம் அந்த சிறுமி மறுத்துள்ளார். அதுமட்டுமின்றி முரளியை பார்த்தாலே அந்த சிறுமி நடுங்க ஆரம்பித்தது. இதையெல்லாம் கவனித்த சிறுமியின் அம்மா அந்த சிறுமியிடம் விசாரித்தார். அதில் முரளி கடைக்கு அழைத்துச் செல்வதாக கூறி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த முரளியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.