மலேசியாவில் ஜிங்ஷன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் லீ என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதற்குள் ஒரு சோக சம்பவம் அரங்கேறிவிட்டது. அதாவது கடந்த மே மாதம் 24 ஆம் தேதி ஒரு கார் விபத்தில் ஜிங்ஷன் லீ இருவரும் பரிதாபமாக இறந்துவிட்டனர்.

இதனால் இரு குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனையில் இருந்த நிலையில் இரு காதல் ஜோடியையும் ஒன்றிணைக்க அவர்கள் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் பேய்  திருமணம் செய்து வைத்தனர். அதன்படி ஒரு மண்டபத்தில் இறந்த காதல் ஜோடியின் புகைப்படம் மற்றும் அவர்கள் போன்ற உருவ பொம்மையை வைத்து பேய் திருமணம் செய்து வைத்தனர். இந்த பேய் திருமணத்தின் மூலம் இறந்த காதல் ஜோடி ஒன்றிணைவதாக அவர்கள் நம்புகிறார்கள். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.