
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூரில் அரசு கலை கல்லூரி உள்ளது. இங்கு அருள் செல்வம் என்பவர் தமிழ் துறை தலைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அருள் செல்வம் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியைகளை செல்போனில் படம் பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஒன்பதாம் தேதி இது பற்றி போலீஸ் அக்கா அமைப்புக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் குணசேகரன் மற்றும் போலீசார் இணைந்து மாணவிகள் மற்றும் பேராசிரியைகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அருள் செல்வம் மீதான புகார்கள் உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் கல்லூரி முதல்வர் கீதா அருள் செல்வத்தை பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.