
தமிழக அரசு போக்குவரத்து கழகம் தற்போது ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. பொதுவாக பேருந்துகளில் செல்லும்போது சில்லறை பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம்தான். குறிப்பாக நீண்ட தூரம் பயணங்களின் போது நடத்துனரிடம் டிக்கெட் வாங்கிய பிறகு மீதி பணத்தை வாங்க சில பயணிகள் மறந்து விடுவார்கள். இது பயணிகளுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கும். எனவே தற்போது பயணிகளின் கவலையை போக்குவதற்கு அரசு ஒரு சூப்பரான உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அதாவது பேருந்துகளில் செல்லும்போது மீதி பணத்தை வாங்க மறந்து விட்டால் TNSTC-யின் இலவச டோல் ஃப்ரீ நம்பர் ஆன 1800 599 1500 என்ற நபருக்கு போன் செய்யலாம். நீங்கள் உங்கள் பஸ் டிக்கெட்டில் பேருந்து பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை கூற வேண்டும். மேலும் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நடத்துனர்களிடம் அதிகாரிகள் விசாரணை செய்து உங்களுடைய மீதி பணத்தை பெற்று தருவார்கள்.