கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கே பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக செல்வது மற்றும் சாகசத்தில் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் மாணவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த கல்லூரி மாணவர்கள் இரு பிரிவுகளாக  பிரிந்து கொண்டு பேருந்து நிலையத்தில் மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்து தாக்கி கொண்டனர்.

இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தி அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.