
மதுரை மாவட்டம் ஆண்டார்கொட்டாரம் பிள்ளையேந்தல் பகுதியில் வசித்து வரும் போஸ் என்பவருடைய மகன் முத்துக்குமார் (29). இவர் சென்னை மாதாவரம் பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்பந்தம் தெரிவித்து விட்டனர். இந்த நிலையில் பவித்ராவின் தோழி திருமணம் சிவகங்கை நடந்த நிலையில் சென்னையிலிருந்து பவித்ரா மதுரை வந்துள்ளார். பிறகு தன்னுடைய காதலருடன் மோட்டார் சைக்கிளில் செல்ல ஆசைப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் மதுரையிலிருந்து சிவகங்கைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று அங்கு நடந்த தோழியின் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
திருமணத்தை முடித்துவிட்டு இரவு மதுரைக்கு புறப்பட்ட நிலையில் இரவு 9.30 மணி அளவில் சிவகங்கை மற்றும் மதுரை சாலையில் உறக்கான் பட்டியில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் கீழே விழுந்த இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பவித்ரா உயிரிழந்தார். பிறகு உயிருக்கு போராடிய முத்துக்குமாரை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முத்துக்குமாரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.