நாடு முழுவதும் வாடகை வாகன இயக்கம் மிகவும் அதிக அளவில் நடந்து வருவதால் மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடிகிறது. குறிப்பாக ஆட்டோ மற்றும் கார் போன்ற வாடகை வாகனங்களை போலவே பைக் இயக்கமும் சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் 5 நாட்களுக்குள் பைக் டாக்சிகள் செயல்பாடு முழுமையாக நிறுத்தப்படும் என்றும் அதை மீறி செயல்படும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பைக் டேக்ஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறை முறையாக அறிவிக்கப்படும் வரை பைக் டாக்ஸிகளை இயக்க அனுமதிக்க மாட்டோம் என சென்னை போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.