தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போதிலிருந்தே அதற்கான வேலையை தொடங்கிவிட்டன. திமுக தலைமையிலான ஆட்சி தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள விஜய் போட்டியிட உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் சீமானின் பேச்சு சமீப காலமாக தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பி வருகிறது.

இப்படியான நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பைத்தியங்களிடம் நாடும் மக்களும் சிக்கிக் கொண்டு தவிக்கின்றனர். மாட்டுப்பால் குடிக்கின்றவன் இடைச்சாதி, மாட்டுக்கறி தின்பவன் கீழ் ஜாதி, மாட்டு மூத்திரம் குடிப்பவன் உயர்ந்த ஜாதி. இதுதான் இன்று இந்த நாட்டில் உள்ள கட்டமைப்பு. இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அரசியல் புரட்சி மட்டுமே ஒரே வழி ஆகும். இங்கு திராவிடமும் ஆரியமும் வேறு வேறு இல்லை. இரண்டுமே ஒன்றுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.