
சென்னை கேகே நகர் 15வது சட்டாரில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 65 வயது ஆகிறது. மணி கிராண்ட் லைன் பகுதியில் 1780 சதுர அடி மற்றும் கூரை வீடு கொண்ட நிலத்தை தேவராஜ் மற்றும் சுகுமார் ஆகியோரிடம் இருந்து வாங்கியுள்ளார்.
இதனையடுத்து தனது மகனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்ததால் மணி அந்த நிலத்தை விற்க முயற்சி செய்தார். அப்போது தான் ஆள்மாறாட்டம் செய்து தில்பன் என்பவருக்கு அந்த நிலத்தை விற்பனை செய்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து மணி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் கிராண்ட் லைன் பகுதியை சேர்ந்த அரசு என்பவர் மணி போன்ற ஆள் மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டு அந்த நிலத்தை விற்பனை செய்தது தெரியவந்தது.
அரசு புழல் ஒன்றிய அதிமுக அம்மா பேரவை செயலாளர் பதவி வகிக்கிறார். மேலும் மாநகர பேருந்து பணிமனையில் ஊழியராகவும் வேலை பார்த்து வருகிறார். 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த அரசுவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.