பொங்கல் கேட்டதற்கு மனைவி இட்லி வாங்கி வந்து கொடுத்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் அரங்கேறி இருக்கிறது. மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். 64 வயது முதியவரான இவருக்கு பாண்டிச்செல்வி என்பவருடன் திருமணம் ஆகி 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சண்முகசுந்தரம் வீட்டிலேயே முடங்கி ஓய்வெடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மருத்துவ சிகிச்சையும் மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 16-ம் தேதி சாப்பிட பொங்கல் வாங்கி வருமாறு மனைவியிடம் முதியவர் கூறியிருக்கிறார். ஆனால் ஷண்முக சுந்தரத்தின் மனைவி பாண்டிச்செல்வி இட்லி வாங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முதியவர் சிகிச்சைக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரையில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து முதியவரை மீட்டு குடும்பத்தார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.