டி.ராஜேந்தருக்கு வேலூரில் 2 தியேட்டர்கள் இருக்கிறது. இதனிடையே வேலூரில் கால்நடை மருத்துமனை அருகிலுள்ள ரயில்வே கேட்டால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியானது நடந்து வருகிறது. இந்த மேம்பாலம் டி.ராஜேந்தர் தியேட்டர் வழியே செல்கிறது.

ஆகவே அவர் நிலத்தில் இருந்து 527 சதுர மீட்டர் நிலம் அரசுக்கு தேவைப்பட்டது. இதற்குரிய நோட்டீஸ் டி.ராஜேந்தருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ராஜேந்தர் வேலூர் பத்திர பதிவு அலுவலகத்துக்கு சென்று தன் 527 சதுர மீட்டர் நிலத்தை பொதுமக்கள் நலனுக்காக மேம்பாலம் கட்ட வழங்கினார். இதற்கென அரசு அவருக்கு 8 கோடியே 15 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்குகிறது.