சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படும் மற்றும் விழிப்புணர்வு இல்லாத பொதுமக்களுக்கு சட்ட உதவிகள் வழங்க வேண்டும் என யூஜிசி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நம் நாட்டில் 1993ஆம் ஆண்டு மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைத்து மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கட்டாயமாக்கி உள்ளது.

மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் விழிப்புணர்வு இல்லாத மக்களுக்கு மாணவர்களால் சட்ட உதவிகள் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை மீது அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் நடவடிக்கை எடுக்கவும் யு ஜி சி கோரிக்கை விடுத்துள்ளது.