தமிழக முதல்வர் ஸ்டாலின் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற வைத்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக கழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி அமைந்துள்ளது.

இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும் கொடுத்துள்ளது. அதே சமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்துள்ளது. நாள்தோறும் பல நல்ல திட்டங்களை செய்து வரும் தமிழக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவது போன்று இந்த வெற்றி அமைந்துள்ளது. மேலும் இந்த வெற்றியை கொடுத்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு நன்றி என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.